
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் இயற்க்கை விவசாயம் தொடர்பான செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த பாலசுப்பிரமணியம் பாமயன் மற்றும் சத்தியமங்களம் சுந்தரராமன் ஆகிய இயற்க்கை விவசாய விஞ்ஞானிகளால் குறித்த செயலமர்வு நடாத்தப்பட்டது.
குறித்த செயலமர்வில் விவவசாய பீட பீடாதிபதி உள்ளிட்ட விவசாய பீடத்தைச்சார்ந்தவர்களும், விவசாய திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள், பாடசாலை மாணவர்கள், வவுனியா மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவைச் சேர்ந்த விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் விவசாய பீட விரிவுரையாளர் கலாநிதி கந்தையா பகீரதன் எழுதிய பாத்தீனியம் தொடர்பான நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

