கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் 25 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான வாகன சுத்திகரிப்பு நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சத்தியராகவன், சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 36 வாகனங்களை பராமரித்தல் தூய்மைப்படுத்தல் என்பவற்றிற்காக ஏற்பட்ட அதிகமான செலவினங்களை குறைக்கும் வகையில் இந்த நவீன சுத்திகரிப்பு நிலையம் உருவாக்க பெற்றது. இதனால் சபை செலவீனங்களை கட்டுப்படுத்த முடியும் எனவும், ஏனைய அரச நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தால், அவர்களிற்கும் சேவை வழங்க முடியும் எனவும் தவிசாளர் குறிப்பிட்டார்.