மட்டு ஓட்டுமாவடியில் வீடு உடைத்து 44 அரை தங்க ஆபரணங்களை திருடிய இருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் வீடு உடைத்து 44 அரை பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் மோட்டர் சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  லசந்த பண்டார தெரிவித்தார்.

ஓட்டுமாவடி பிரதேசத்திலுள்ள ஆசிரியர்களான கணவன் மனைவி கடந்த 3 ம் திகதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு பாடசாலைக்கு சென்று வீடு திரும்பியபோது வீட்டின் கூரையை உடைத்து வீட்டுக்குள் இறங்கிஅ ங்கு அறையில் அலுமாரியில் இருந்த 44 அரை தங்க ஆபரணங்கள் திருடப்பட்டிருந்தன.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் கொஸ்தாப்பர் எஸ்.எம்.வை.தினேஸ் க்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.ஜி. குமாரசிறி கருணாரத்தின தலைமையிலான பொலிஸ் கொஸ்தாப்பர் 68968 எம்.ஜி.நிரோசன் ஜானக, 71739 டி.ஆர்.பி.விக்கிரமசேன, 8656 எஸ்.எம்.வை.தினேஸ், 93663 பி.வி.எஸ்.வி. அமரசேகர, ஆகியேர் கொண்ட பொலிஸ் குழுவினர்.

சம்பவதினமான இன்று காலை திருடர்களின் வீடுகளான மீராவேடை, வாழைச்சேனை ஆகிய இரு வீடுகளையம் சுற்றிவளைத்து 39, 34 வயதுடைய இருவரையும் கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களையும்; திருட்டுக்குப் பயன்படுத்திய மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews