
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த பெண் மருத்துவரை சந்திக்க முன்னர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.சாவகச்சோியை சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் சிகிச்சை பெறுவதற்காக சாவகச்சோி வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்றார்.
வைத்தியசாலையில் வைத்தியரை சந்திப்பதற்காக காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அவருடைய உடலிலிருந்து பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டபோது.
அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டிருக்கின்றது