பருவ மழை இன்மையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் பெரும்போக பயிர்ச் செய்கையில் இடுபட்டுவரும் விவசாயிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நீர் இல்லாது பதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது நெற்கதிர்கள் உருவாகும் நிலையில் பயிருக்கு தேவையான நீர் இல்லாத காரணத்தினால் வயல் நிலங்கள் வறட்சியடைந்து வருகின்றது.
இதனால் வளர்ச்சியும் குன்றியே காணப்படுகின்றது. இந்த நிலையில் சில விவசாயிகள் தம்மால் இயன்றவரை குளங்களுக்கு அருகே உள்ள வயல்களுக்கு பம்பிகள் மூலம் நீர் பாய்ச்சி வருகின்றனர்.
அத்துடன் சிலர் இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக 5 நாட்கள் 6 நாட்களாக வயல்களிலே தங்கி நின்று நீர் பாச்சும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மழையை மாத்திரம் நம்பியுள்ள மானாவாரி பயிர்ச்செய்கையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது. மழையின்மை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.