
பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிடுவதற்காக பொலிஸாரை ஈடுபடுத்த வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பாடசாலை மாணவர்களினதும் புத்தக பைகளை சோதனையிட வேண்டாம்.அது பாடசாலைகளுக்கு உரித்தான பொறுப்பாகும்.
பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளை நிர்வாகம், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.