தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் வருமானம் குறைந்த மக்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவது அவசியம் என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை பரிந்துரைகளை முன்வைத்த வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறை முக்கியஸ்தர்கள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கோவிட் ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தின் போதே இந்த விடயங்கள் தெளிவுப்படுத்தப் பட்டுள்ளன.இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,