
காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜவுடன் அமைச்சின் செயலாளர் அடங்கிய குழு ஒன்று நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டது.


காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னேற்பாடாக இறங்குதுறை மற்றும் சுங்கப் பகுதி, கட்டுமானங்களை ஆரம்பிப்பது தொடர்பில் கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரூவான் சந்திர தலைமையிலான குழுவினர் வடமாகாண ஆளுநருக்கு தெளிவு படுத்தினர்.
குறித்த கலந்துரையாடலில் சுங்கத்தினைகளை அதிகாரிகளும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது