இந்திய அரசின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வடக்குக்கான தொடருந்துப் பாதையை நவீன மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டடம் இன்று (08.01.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு மதவாச்சி தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றது.
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான தொடருந்துப் பாதையில் மதவாச்சி தொடக்கம் ஓமந்தை வரையிலான தொடருந்துப் பாதைகளை நவீன மயப்படுத்தும் நோக்கோடு இந்திய அரசின் நிதி உதவியில் புனரமைப்பு நடவடிக்கைகள் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனால் வடக்குக்கான தொடருந்து சேவைகள் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் திருத்த வேலைகள் 5 மாதங்களுக்கும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன, இலங்கைக்கான இந்திய துணைத்தூதர் கோபால் பாஸ்லே, இராஜாங்க அமைச்சர் சேமசிங்க, இராஜாங்க அமைச்சர் சிறிபாலகம்லத், தொடருந்துத் திணைக்கள அதிகாரிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.