போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வு கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்தப்பட்டது.
நிகழ்வில் பழைய மாணவர்களுக்கான மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டு பிரிவிலிருந்துமாக 15 அணிகள் நட்பு ரீதியில் மோதிக் கொண்டன.
2008 மற்றும் 2015ம் ஆண்டு கல்வி கற்ற அணிகள் இறுதி போட்டியில் பங்கெடுத்தது. போட்டியில் 2015ம் ஆண்டு அணி கிண்ணத்தை தனதாக்கியது.
நிறைவில் வெற்றி பெற்ற அணிக்கான கேடயமும் பரிசும் வழங்கப்பட்டது. இதேவேளை, போதைப்பொருள் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை இயக்குனர் Dr.T சத்தியமூர்த்தி கலந்துகொண்டிருந்ததுடன், பாடசாலை முதல்வர் எஸ்.சிறிதரன், பழைய மாணவர்கள், பாடசாலை சமூகத்தினர், கிராம மட்ட அமைபுக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, குறித்த பகுதியை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்களும் 100 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன் முன்னை நாள் பாடசாலை முதல்வர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது. இதற்கான நிதி அனுசரணையை அபிசேக் பவுண்டேசன் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.