
கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் ஸ்டேஸ் வீதி பகுதியில் போலி நாணயத்தாளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 29 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்த நபர்கள் நேற்று மதியம் ஸ்டேஸ் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வழங்கி எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் சிலர், போலி நாணயத்தாளுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இவர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.