சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின் பொதுக் கூட்டம்…!

சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின்  பொதுக் கூட்டம், பெருந்தொற்றுப் பேரிடர் காரணமாக, மூன்று ஆண்டுகளின் பின்னதாக 2023ம்  நேற்று  முன்தினம் 08/01/2023.பேர்ண் மாநகரில் அமைந்துள்ள பல் சமயக் கூடத்தின் உரையாடல் மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.
ஞானலிங்கப் பெருமானின் வழிபாட்டினைத் தொடர்ந்து ஒன்றியத் தலைவர் சிவத்திரு. தர்மலிங்கம் சசிகுமார்  தலைமையுரையுடன் பொதுக் கூட்டம்  ஆரம்பமாகியது. ஒன்றியத்தின் கடந்தகாலச் செயற்பாடுகள் குறித்து, தலைவர் சிவத்திரு. தர்மலிங்கம் சசிகுமார் மற்றும் செயலாளர் திரு. இராதாகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றுகையில், சுவிஸ் வாழ் ஈழத்தமிழர்களுக்கும், சைவப் பெருமக்களுக்குமான ஒரு சுதந்திரமான கூரையமைப்பாக உருவாக்கம் பெற்ற ஒன்றியத்தில், சுவிற்சர்லாந்தின் 26 ஆலயங்களின் பிரதிநிதிகள் இணைந்துள்ளதையும், அவ்வாறு இணைக்கப்பெற்ற சிறிது காலத்துள்ளேயே ஒரு பெருவிழாவினை முன்னெடுத்ததும், அதன் பின்னதாகப் பெருந்தொற்றுக் காலத்தில், பொதுவெளியில் ஒன்று கூட முடியாதவிடத்தும், இணையவழியில் கலந்துரையாடி இயன்றவரையில் பொதுப்பணிகளை முன்னெடுத்திருப்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகக் குழு தெரிவில்
தலைவராக   சூரிச் சிவன் கோவில்.  சி.இராதாகிருஷ்ணன்,
உபதலைவராக  பேர்ண் ஞானலிங்கேசுவரர் கோவில் சிவத்திரு. த.சசிக்குமார் ,
செயலாளராக திச்சினோ – ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் சிவஶ்ரீ: நா.கஜேந்திரக் குருக்கள் –
உப செயலாளர்
பேர்ண் கல்யாண சுப்பிரமணியர் ஆலயம்.  பொருளாளர் லுட்சேர்ன் துர்க்கையம்மன் ஆலய க.சபாரஞ்சன் ஆகியோர் புதிய நிர்வாகசபை உறுப்பினர்களென ஏகமனதாகத் தெரிவு செய்யப்பெற்றார்கள்.
புதிய நிர்வாகசபை  விரைவில்  புதிய செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனத் தெரிவித்து, நன்றி பகிர்தல்களுடனும், சைவநெறிக் கூடத்தின் மதியபோசன விருந்துபசாரத்துடனும் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews