
சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் இரண்டு அரச வங்கிகளுக்கு 71 ஆயிரத்து 621 மில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது என தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறுகிய கால நிதி தேவைக்காக இரண்டு பிரதான அரச வங்கிகளிடமிருந்தும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடன் பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2016 – 2017ம் ஆண்டுகளில் மத்திய வங்கியின் பிணையின் அடிப்படையில் 31 ஆயிரத்து 115 மில்லியன் ரூபாவையும், 2017 – 2018ம் ஆண்டுகளில் அரச வங்கிகளிடமிருந்து 29 ஆயிரத்து 439 மில்லியன் ரூபாவையும் கடனாக பெற்றுள்ளது. மேலும் 2020 – 2021ம் ஆண்டுகளில் இரண்டு வங்கிகளிலிருந்தும் 75 மில்லியன் டொலர் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே நட்டத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.