
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவுளை,மின்சாரக் கட்டணங்களுக்கான செலவுச் சீர்திருத்தத்துடன் கூடிய விலைச் சூத்திரத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், உரிய விலைச் சூத்திரத்திற்கான முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.