தாயின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்த போதை பொருள் அடிமை கைது…!

மட்டக்களப்பு நகர் பகுதியில் போதைஸ்துக்கு அடிமையாகிய திருமணம் முடித்த ஒருவர் போதை பொருள் வாங்க பணத்தேவைக்காக அவரின் தாயின் 5 பவுண் தங்கச் சங்கிலியை கழுத்தில் இருந்து அறுத்து கொள்ளையிட்டவரை நேற்று திங்கட்கிழமை (9) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.

குறித்த நபர் மாங்காட்டு பிரதேசத்தில் திருமணம் முடித்து வாழ்ந்து வரும் நிலையில் போதை பொருளுக்கு அடிமையான நிலையில் கடந்த 2ம் திகதி நகர்பகுதியில் வாழ்ந்துவரும் தாயரின் வீட்டிற்கு சென்று பணம் கேட்ட நிலையில் அவர் பணம் இல்லை என்றதும் தாயாரின் கழுத்தில் இருந்த 5 பவுண் தங்க சங்கிலியை அறுத்து எடுத்து கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிசார் குறித்த நபரை நேற்று திங்கட்கிழமை அதிகாலை மாங்காட்டில் வைத்து கைது செய்ததுடன் கொள்ளையடிக்கப்பட்ட தங்க சங்கிலியை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார் என அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews