
கியூ ஆர் 662 என்ற விமானத்தில் கட்டாரில் இருந்து இலங்கை வந்த பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த நபர் விமான நிலையத்தின் வருகை முனையத்திற்குள் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
55 வயதுடைய புத்திக கருணாரத்ன எனப்படும் உயிரிழந்த நபர் கனடாவில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் புறக்கோட்டை பிரதேசத்தில் வசிக்கும், தனது உறவினர்களை சந்திப்பதற்காக நாட்டிற்கு வந்த போது துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.