வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று (10) மாலை மதவாச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
செட்டிகுளம் பொலிஸார் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே 6 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மதவாச்சி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.