
கல்வி கூட்டுறவுச்சங்கத்தின் பணிப்பாளர் சபையை உடனடியாக கூட்டுமாறும், பணிப்பாளர் சபைக்குரிய தேர்தலை உடனடியாக நடாத்துமாறும் கோரி போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் கிளிநொச்சியில் உள்ள வடமாகாண கல்வி கூட்டுறவுச் சங்கங்க காரியாலயம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தினை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் முன்னெடுத்திருந்தனர். இதன் போது பதாகைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.



