சுமார் 14,220 பேர் தொடர்ந்தும் வீடுகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை சேவைகள் பிரிவின் இயக்குநர் வைத்தியர் அயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
1390 என்ற அவசர இலக்கத்தினூடாக வீடுகளிலுள்ள தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுபவர்கள் தமது பிரிவுக்கு உரித்தான சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுசுகாதார பரிசோதகரினூடாக பதிவுசெய்து கொள்ள வேண்டியது அவசியம்.
அவ்வாறு பதிவுசெய்துகொள்பவர்களுக்கு மட்டுமே இந்த சேவை பெற்றுக்கொடுக்கப்படும் என்று வைத்தியர் அயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் உடல்நிலைமை தொடர்பில், தினமும் மருத்துவரால் தொலைபேசியில் பரிசோதிக்கப்படுகிறது.
அத்துடன் வீடுகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வரும் தொற்றாளர்களுக்கு ஒட்சிசன் தேவைப்படும்பட்சத்தில் அதற்கான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு சுகாதார அமைச்சினால் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.