
குளியாபிட்டிய பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி முட்டைகளை ஏற்றி பயணித்த சிறிய ரக கப்ரக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியில்”மோதுண்டத்தில் முட்டை வாகனத்தின் பயணித்த சாரதி, மற்றும் உதவியாளர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் முட்டை வாகனத்தில் பயணித்த உதவியாளர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் பளை வேம்போடுகேணி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ரமேஷ்வரன் சாரங்கன் என்பவர் ஆவார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாங்குளம் போலீசார் மேற்கொண்டு வருகின்றார்.
