
வேக கட்டுப்பாட்ட இழந்த பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சிறுப்பிட்டி பகுதியில் உள்ள கராச் ஒன்றிற்குள் புகுந்ததில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கராச்சில் திருத்தத்திற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிற்றூர்தியும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் மின்சார தூண்களும் சேதமடைந்துள்ளன.




குறித்த விபத்தில் பயணிகளுக்கோ அல்லது குறித்த வாகன திருத்தகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கோ எந்தவிதமான இழப்புகளும் ஏற்படவில்லை.
குறித்த விபத்து தொடர்பில் பொலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.