
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 195 முதல் 200 ரூபா வரை குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் கையிருப்பு அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணம் எனவும், இதன் விலை குறைப்பை நீண்ட காலத்திற்கு எதிர்பார்க்க முடியாது எனவும் மொத்த வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.