கிளிநொச்சியில் அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கத்தால் பொங்கல்பானை மற்றும் பொங்கல் உபகரணம் வழங்கி வைப்பு

அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கத்தால் 14.01.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் அ.ரெனாட்சன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆரம்பநிகழ்வான. அகவணக்கம் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மங்கல விளக்கினை அகரம் நிறுவன தலைவர் ஜேசுராசா மதியழகன் ஏற்றியதை தொடர்ந்து பிரதம கௌரவ, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அகரம் ஒருங்கிணைப்பாளர், உதவிகளை பெற வந்தவர் சார்பில் ஒருவர் என மங்கலவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அதன்பின் மாணவிகளால் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து வரவேற்பு உரையினை யாழ்மாவட்ட இணைப்பாளர் ஐங்கரனால் நிகழ்த்தப்பட்டது. அதன்பின் தலைமை உரை அகரம் ஒருங்கிணைபாளர் ஜெயபாலன் பானுசந்தரால் அகரத்தின் பணிகள்,நோக்கம்,சேவைகள்,எதிர்கால செயற்பாடுகள் போன்றன விரிவாக கூறி தலைமை உரை நிகழ்த்ததப்பட்டது. பிரதம விருந்தினராக ஜேக்குமார் குருக்கள் (டுதீஸ்ஸர்மா) அவர்களும் கௌரவவிருந்தினராக அருட்பணி டானியல் தயாளன் (பங்குத்தந்தை) அவர்களும் கலந்து ஆசியுரைகளை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிராமசேவையாளரான ஆறுமுகம் பபிகரன் அவர்களும் அகரத்தின் செயற்பாடுகள் தொடர்பாக சிறப்பான உரையாற்றினார். நன்றியுரையினை வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் வே.கனீஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அத்துடன் அகரத்தின் செயற்பாடுகள் காணொளியாக காட்டப்பட்டது. அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்திசெய்யப்படது. குறுகிய காலத்தில் நிறைய பணிகளை வடக்குகிழக்கில் ஆற்றியுள்ளது தொடர்ந்தும் ஆற்றி வருகிறது. நான்கு வருடமாக அனைவரும் தமிழர் திருநாளில் பொங்க வேண்டும் என்ற நோக்கில் “பொங்குவோம் பொங்கவைப்போம்” என்ற தொனிப்பொருளில் பொங்கல் பானை மற்றும் பொங்கல் உபகரணங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. இவ் வருடமும் தொடச்சியாக வடக்கு கிழக்கு மண்ணில் பொங்கல் பானை உபகரணங்கள் வழங்கிவரும் தருணத்தில் அதன் ஒருகட்டமாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள மக்களின் நலன்கருதி இன்று நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பொங்கலை பொங்கி கொண்டாட முடியாமல் கஸ்ரப்படும் உறவுகளை இனம் கண்டு 54குடும்பங்களிற்கு பொங்கல் பானை மற்றும் பொங்கல் உபகரணங்கள் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலை தனியார் கல்வி நிலையங்களிற்கு நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லும் இரு மாணவர்களிற்கு துவிச்சகரவண்டிகளும் வழங்கப்பட்டதோடு பொருளாதாரரீதியாக கஸ்ரப்படும் மாணவர்களிற்கு கற்றல்சார்ந்த உபகரணங்கள்,சப்பாத்து போன்றனவும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகரம் இணைப்பாளர்கள் கலந்து நிகழ்வை ஒழுங்குபடுத்தினார்கள். இவ் உதவிகளை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் அன்புக்கரம் புரிந்த அகரத்தின் புலம்பெயர் நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து தமது வீடுகளிலும் இவ்வருடம் பொங்கலை கொண்டாட அகரம் குடும்பம் உதவிபுரிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews