சர்வதேசமெங்கும் பரந்து வாழும் இனங்களில் தமிழ் இனம் போலவே மிகவும் கடின உழைப்பில் நம்பிக்கை வைத்து வாழும் இனங்களில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தமது தாயகமாக கொண்ட சீக்கிய இனமும் ஒன்றாகும். இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து தமது தாயகத்தை மீட்கும் பொருட்டு தாம் இடம் பெயர்ந்த வாழும் நாடுகளில் சீக்கிய இனத்தவர்கள் மத்தியில் தற்பொழுது பொதுசன வாக்கெடுப்பு நடாத்தி வருகின்றனர்.
இது வரையில் இடம் பெற்ற வாக்கெடுப்புகளின் அடிப்படையில் இங்கிலாந்து சுவிட்சர்லாந்து இத்தாலி கனடா போன்ற நாடுகளில் மாத்திரம் சுமார் இரண்டு லட்சத்து எட்டாயிரம் சீக்கியர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளனர். 2020ஆம் ஆண்டிலிருந்து கட்டம் கட்டமாக ஒவ்வொரு நாடுகளிலும் தமது புலம் பெயர் சமுதாயத்தின் மத்தியில் இந்த வாக்கெடுப்புகளை நடாத்தி வருகின்றனர்.
சர்வதேச நீதி அமைப்பு முறையின் கீழ் சட்டம் ஒழுங்கு ஆகியனவற்றின் ஊடாக தாம் தனித்தவமான சுயநிர்னயம் கொண்ட ஒரு அரசை உரு வாக்கி கொள்வதற்கான அபிலாசைகளை வெளிக்காட்டும் நோக்கத்துடன் இந்த வாக்கெடுப்புகள் இடம் பெறுவதாக இதனை ஒழுங்கு செய்துள்ள நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு கூறி வருகிறது. அத்துடன் நியாயகரமான சர்வசனவாக்கெடுப்பு என்பது அங்கீகாரம் கொண்ட நிறுவப்பட்ட ஒரு சர்வதேச சட்ட முறை என இந்த அமைப்பு நம்புகிறது.
1947இல் சுதந்திர இந்தியா அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே பஞ்சாப்பிராந்தியத்தை சேர்ந்த சீக்கிய இனத்தவர்கள் தமது தாயகத்தை காலிஸ்தான் என்று அழைத்து வந்தனர். காலிஸ்தான் சுதந்திர கோரிக்கை படிப்படியாக பல சிரமங்களின் மத்தியில் வளர்ந்து வந்தது. இது 1980 களின் ஆரம்பத்தில் மிக முக்கியமான திருப்பு முனைகளை கண்டது. இந்த கோரிக்கை போராட்டமாக மாறிய போது 1984 ஆம் ஆண்ட ஜுன் மாதம் அன்றய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் மிகடுமையாக நசுக்கப்பட்டது.
காலிஸ்தான் விடுதலைப் போராட்ட தலைவர் பிந்தரன்வாலே உட்பட சுமார் 300 வரையான சீக்கியர்கள் அவர்களின் புனித தலமாக கருதப்படும் பொற்கோயிலில் வைத்து கொல்லப்பட்டனர். நீல நட்டச்திர நடவடிக்கை என்ற பெயரில் இடம் பெற்ற இந்த இராணுவ நடவடிக்கை இந்திய வரலாற்றில் மிக கொடுமையானது என்று சீக்கியர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இந்த படுகொலை இடம் பெற்ற மூன்றே மாதத்தில் பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்த வன்முறைகள் சீக்கிய மக்கள் மீது மிகக்கடுமையாக கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆரசுக்கு ஆதரவான சீக்கிய உளவு குழுக்கள், பொலீசார் மற்றும் காடயர்கள் ஊடாக பாரீய கொடுமைகள் இழைக்கப்பட்டது. சுமார் மூவாயிரம் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாக அரச புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் அதே வேளை பதினையாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக சீக்கிய தரப்பினர் கூறுகின்றனர்.
மேலும் சுதந்திர காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இன்னமும் விசாரனைகள் எதுவுமின்றி காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஏராளம் சீக்கியர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடினர். புலம் பெயர் நாடுகளில் தஞ்சம் புகுந்து கொண்டனர்.
இவர்கள் பல நாடுகளிலும் தமது சுதந்திரத்திற்கான கருத்தாதரவுகளை உருவாக்குவதில் மிகவும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். தற்பொழுது பஞ்சாப் பொதுசன வாக்கெடுப்பு ஆணையம் ஒன்றை உரு வாக்கி அதனை அரச சார்பற்ற நிறுவனமாக சர்வதேச நாடுகள் எங்கிலும் பதிவு செய்து உள்ளனர். இந்த ஆணையம் தமது அபிலாசைகளுக்கு அமைதியான வழிகளில் தீர்வு காணுதல் என்பதை மையமாக கொண்டு செயற்படுகிறது.
இந்த ஆணயத்தின் அடுத்த கட்ட வாக்கெடுப்பு அவுஸ்திரேலிய சீக்கிய புலம் பெயர் சமுதாயத்தின் ஆணையை பெறும் வகையில் இம் மாதம் 26ஆம் திகதி மெல்பேன் நகரில் இடம் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் விசேடமான விடையம் என்னவெனில் இந்த சர்வசன வாக்கெடுப்புகளை நடாத்துவதற்கான சிந்தனையை தாம் தமிழர்களிடம் இருந்தே பெற்று கொண்டதாக அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.
2009 – 2010 ஆம் ஆண்டகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் தமது சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு மேலை நாடுகளிலும் சர்வசன வாக்கெடுப்பை நடாத்தி இருந்தனர். ஆனால் இந்த வாக்கெடுப்பிற்கு போதுமான ஊடக மரியாதை கொடுக்கப்படவில்லை அத்துடன் அரசியல் தாக்கத்தில் மிக சிறிய அளவிலேயே ஏற்படுத்த முடிந்தது என்பதுடன் அந்த வாக்கெடுப்பு மிகச்சிறந்த வகையிலான நடைமுறை அம்சங்களை கொண்டிருக்கவில்லை என்பதுவும் சீக்கியர்களது பார்வையாக உள்ளது.
ஆகவே தமது வாக்கெடுப்புகளை சர்வதேச நெறிமுறைகளை அதிக அளவில் இறுக்கமாக பின்பற்றும் வகையில் ஒழுங்கு செய்வதன் கட்டாயத்தை உணர்த்தி வருகின்றனர். அத்துடன் தமது சமுதாய உறுப்பினர்களை அதிக அளவிலான மேலைத்தேய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி ஈமெயில் போராட்டங்களை நடாத்தவதற்கும் கருத்தாதரவு வெளியீடுகளை அனுப்பி வைப்பதற்கும் இடைவிடாத நிகழ்ச்சித்திட்டங்கள் வகுக்கப்பட்டு இதற்கான அறிவூட்டல்களும் இடம்பெற்று வருவதாக நீதிக்கான பஞ்சாப் அமைப்பு தனது அறிக்கையில் கூறி உள்ளது.
நியாய பூர்வமான தமது அபிலாசைகளை வெளிப்படுத்துதல் என்பதை மையமாக கொண்ட இந்த செயற்பாடுகளுக்கு எதிராக இந்திய அரசின் நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக அமைந்துள்ளது. நீதிக்கான சீக்கியர்களின் அமைப்பு 2019 ஜுன் 10 ஆம் திகதி இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பான அமைப்பாக தடை செய்யப்பட்டது. இது ஒரு பிரிவினைவாத தரப்பாக முத்திரை குத்தப்பட்டுள்ளது.
இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகையின் அறிக்கைகளின் படி இந்த ஆணையத்தின் இந்திய எதிர்ப்பு கோட்பாடுகளை வளர்ச்சியடைய செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து இந்திய அரசாங்கம் கனேடிய அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது . இருந்த போதிலும் கனேடிய அரசாங்கம் சீக்கிய சமுதாயம் தனது அபிலாசைகளை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்து வரும் சனநாயக வழியிலான நடவடிக்கைகளை தடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
சீக்கிய சமுதாயமோ சர்வதேச அளவில் தமது அபிலாவைகளை வெளிபடுத்தும் செயற்பாடுகளை கைவிடவில்லை. மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளாக சித்தரிப்பதையும். பொதுவான எதிர் கருத்து கொண்ட மக்களை கடுமையான தேச துரோக குற்றச்சாட்டகள் மூலம் பொய் பிரசாரங்களை செய்து வருவதாகவும் கூறுகின்றனர். தம்மை ஒரு குற்ற சமுதாயமாக இந்திய மத்திய அரசு சித்தரித்து வருவதாக சீக்கியர்கள் கருதுகின்றனர். இருந்த பொதிலும் தம்மீது நடாத்தப்பட்ட இன அழிப்புகள் இடம் பெற்று சுமார் 40 ஆண்டகளை எட்டுகிண்ற போதிலும் தமது போராட்டத்தினை சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட நெறி முறைகளில் இருந்து தவறாது செயற்பட்டு வரகின்றனர்.