
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று தீப்பிடித்தது. அப்போது தொழிற்சாலைக்குள் 26 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 15 தொழிலாளர்கள் தீயில் சிக்கி உடல் கருகி இறந்தனர். மற்றவர்களின் நிலை தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்க லாம் என சந்தேகிக்கப்படுகிறது.