
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனைகள் தொடர்பில் தமது ஆணைக்குழுவின் தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் ஆராயப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், திருத்தங்கள் செய்யப்படுமாயின் மின்சார சபையுடன் கலந்துரையாடி அடுத்தமாதம் 15 ஆம் திகதி அறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவுகள் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித் துள்ளது.