
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார். புதிய சட்டமூலத்தை அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவையில் முன்வைக்கும் நோக்கில் அமைச்சரவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நெரின்புள்ளே மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நாளிந்த இந்திரதிஸ்ஸ ஆகியோரின் இணை தலைமையுடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தேசிய பாதுகாப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.