
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற இந்தக் குழு மோதலில் இருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கிரியுல்ல பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைக் கிரியுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.