பல எரிபொருள் நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் அதிகாரிகளுடன், நேற்று (16) நடைபெற்ற எரிபொருள் ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR) முறையை பின்பற்றாத எரிபொருள் நிலையங்களின் செயற்பாடுகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட வேண்டிய 105 பில்லியன் ரூபாவை உடனடியாக பெற்றுக்கொள்வது, தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை வழங்குவது மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ந்து இயங்க வைப்பது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Previous Article
வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு!