
பாடசாலை மாணவிகளுடன் சேட்டை விட முற்பட்ட நபர்களை தடுக்க முற்பப்பட்ட முகமாலை கிராம தலைர் மீது போதையில் நின்ற அண்ணன் தம்பிமார் நேற்று தாக்குதல்
நடத்தியதில் கிராம தலைவர் பலத்த காயயங்களுக்கு உள்ளான நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருநஸது மேலதிக சிகிச்சைக்காக. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதெவது.
தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்லும் மாணவிகளுடன் சேட்டையில் ஈடுபது வருவதாகவும் இந்நிலையில் இன்றும் குறித்த மாணவிகளுடன் குறித்த இளைஞர்கள் சேட்டையில் ஈடுபட முற்பட்ட வேளை அதனை தடுக்க முற்பட்ட முகமாலை தலைவர் மீது அங்கிருந்த அண்ணன் மற்றும் தம்பிமார் தலைவர் மீது தாக்கியதிலேயே கிராம தலைவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
குறித சம்பவம்
17.01.2023 மாலை. 06.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது.




