
கிளிநொச்சி மாவட்ட பளை பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் (பளை ஈசாவின்) வேண்டுகோளுக்கமைய பளை பிரதேசத்தில் அவதானிக்கப்பட்ட வறுமைப்பட்ட குடும்பங்கள் மற்றும் விசேட தேவைக்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது.
பளையில் செய்திகள் சேகரிக்க சென்ற நேரங்களில் பல குடும்பங்களின் வறுமை நிலையை உறுதிபடுத்திய பின்னர் புலம்பெயர் தேசங்களில் உதவி கோரிய நிலையில் புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் நகுலேஸ்வரன் நிர்மலா அவர்கள் தாமாகவே முன் வந்து பசித்தவர்களுக்கு எம்மால் முடிந்த உதவி புரிய வேண்டும் என நல் மனதோடு உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைத்தார்.
குறித்த உலர் உணவுப் பொதிகள் வறுமையிலும் வறுமையில் வசிக்கும் எம் உறவுகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டன.மேலும் பொதிகள் வழங்கி வைப்பதற்கு உதவிய கிளிநொச்சி ஊடக அமையம் மற்றும் மின்னல் 24 செய்தி தளம் மற்றும் புலம்பெயர் தேச உறவுக்கு தமது மனமார்நத நன்றிகளை மக்கள் தெரிவித்திருந்தனர்.


