
கடந்த. 2023.01.13 ம் திகதி நெல்லியடி விழுந்த ஆலடி பகுதியில் அரச உத்தியோக பெண் ஒருவர் தனது வேலையை முடித்து வீட்டு வாசலில் முன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி தனது வீட்டு கேற்றை திறக்க குற்பட்ட வேளை கொள்ளையர்களால் 2 பவுண் தங்கச் சங்கிலியை அபகரிக்கப்பட்ட நிலையில் நெல்லியடி பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் துரிதமாக செயற்பட்ட நெல்லியடி பொலீஸ் நிலைய புலனாய்வாளர்கள் சாவகச்சேரியை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நொரையும் மோட்டார் சைக்கிளையும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



