
மாணவர்கள் கல்வியிலே முழு கவனத்தையும் செலுத்துவதற்கு பெற்றோர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்சகரும் வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் இணைப்புச் செயலாளருமான தம்பியையா கணேசநாதன் கேட்டுக்கொண்டார்.யாழ்ப்பாணம் குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பொங்கல் நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
தற்போது பாடசாலை மாணவர்களின் கல்வியை திசை திருப்புவதற்கு போதை உள்ளிட்ட தீய பழக்கங்கள் சமூகத்தில் அதிகம் காணப்படுவதால் பெற்றோர்கள் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் மூழ்கி இருக்காது மாணவர்களின் கல்விக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் இதன்போது தெரிவித்தார்.
கல்லூரி அதிபரின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பொங்கல் நிகழ்வு மற்றும் கலை, இலக்கிய நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் பிரதம விருந்தினராக சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகராக கடமை புரிந்து தற்போது வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் செயலாளராக பணிபுரிந்து வரும் தம்பையா
கணேசநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சீருடைகளை வழங்கி வைத்தார்.
நிகழ்வில் காங்கேசன்துறை பொலீஸ் அத்தியட்சகர் சுண்ணாகம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, வலிகாமம் கல்வி வலைய வளவாளர்
ச.முகுந்தன், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் விழா அனுசரனையாளர்களான திருமேனி பஞ்சாட்சரதேவன், கணபதிப்பிள்ளை தேவராசா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.