
கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செலுத்தியுள்ளது.
ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தலைமையிலான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று பிற்பகல் செலுத்தியுள்ளனர்.

