
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட அவர்கள் மரியாதை நிமித்தமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும்
விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலைப்பாட்டின் மேம்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினாா்.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் ஆகியோா் கலந்து கொண்டனர்.