
குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் பருத்தித்துறை போலீசாரால் சட்டவிரோதமாக வெட்டி கொண்டு இருந்த மாட்டு இறைச்சியும் இறைச்சிக்கு வெட்டுவதற்காக தயாராக கட்டப்பட்டிருந்த ஒரு பசு மாடும், மீட்கப்பட்டுள்ளதுடன் கப் ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது இன்று அதிகாலை பருத்தித் துறை போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உடனடியாக விரைந்த போலீசார் இறைச்சிக்காக வெட்டப்பட்ட ஒரு மாட்டின் இறைச்சியையும், இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாட்டை மீட்டுள்ளதுடன் கப் ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் போலீசார் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் போலீசாரால் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளிலும் மாடுகள் தினம் தினம் களவாடப்படுவதும் போலீசார் தொடர்ச்சியாக மாடுகளை மீட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.





