
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்படத்தக்கது.