கையடக்க தொலைபேசிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறைமையொன்றை தயாரித்து வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அட்டை தேவையில்லை எனவும், அது கையடக்க தொலைபேசிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சாரதி அனுமதிப்பத்திர அட்டை தேவைப்படுபவர்கள் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திர உள்ளீடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக அச்சிடுவதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 6 மாதங்களுக்குள் அது தீர்க்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.