பரீட்சை நடைபெறும் காலத்தில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்- டலஸ் அழகபெரும

இந்த அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் உறுதிப்பூண வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸ் கொழும்பில் இன்று (25) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்டியெழுப்பப்பட்டு 10 நாட்கள் செல்வதற்கு முன்னர் உள்ளூ0ராட்சிமன்ற தேர்தலுக்காக 209 உள்ளூராட்சிமன்றங்களுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடிந்துள்ளது.

தற்போது கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை நடைபெற்று வருகின்றது.

பரீட்சை நடைபெறும் காலத்தில் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றே சகல கட்சிகளிடமும் கோருகின்றோம்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்களே பாரிய சவால்களுக்கு மத்தியில் தற்போது பரீட்சையை எதிர்கொள்கின்றனர். எனவே அந்த மாணவர்கள் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் பரீட்சையை எதிர்கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.

பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படக்கூடாது.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தொடர்பில் உணர்திறனுடன் செயற்படுமாறே நாம் ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.

Recommended For You

About the Author: Editor Elukainews