மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதியை வழங்க முடியாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நேற்று சென்றிருந்த நிலையில் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்பேதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் கூறும் விடயங்களை செயற்படுத்திக்கொண்டு இருக்க முடியாது.
சட்டத்துக்கு அமைவாகவே செயற்பட வேண்டும்.
இது தொடர்பில் அமைச்சரவை வழங்கிய தீர்வு தொடர்பில் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கல்வி பொதுதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்தியது பாரிய மனித உரிமை மீறலாகும்.
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏற்ற வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
க.பொ.த உயர்தரம் என்பது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு காரணியாக அமைந்துள்ளது.
எனவே க.பொ.த உயர்தர இறுதி பரீட்சை என்பது முக்கியத்துவமிக்கது.
எனவே இந்தக் காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தாது அந்த மாணவர்களுக்கு பரீட்சைக்கு ஆயத்தமாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்க வேண்டும்.
பரீட்சை காலத்தில் சீரான மின்விநியோகத்தை வழங்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உரியது.
எனவே எதிர்வரும் நாட்களிலும் தொடரவுள்ள பரீட்சைகளை கருத்திற்கொண்டு சீரான மின்விநியோகத்தை வழங்க வேண்டியது அவசியமாகும்.
அதேபோன்று மின்கட்டண அதிகரிப்பு நாம் எவ்வித அனுமதியையும் வழங்கப் போவதில்லை.