கடந்த வருடத்தில் 3 இலட்சத்து 12 ஆயிரம் பேரை வெளிநாடுகளுக்கு அனுப்பியதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரித்துக் கொண்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஆரம்பமாகி பல நாட்கள் கடந்துள்ளன. கடந்த வருடத்தை நினைத்துப் பார்த்தால், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் மிகவும் பயங்கரமான நிலைமையே நாட்டில் காணப்பட்டது.
எரிவாயு, எரிபொருள், மருந்துகள் இல்லாமல் நாடு நெருக்கடிக்குள் மத்தியில் பயணித்தது.
மிகவும் தீவிரமான நிலைமையை நாடு எதிர்கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில் பாரிய சவால்களுக்கு மத்தியில் நாம் நாட்டை பொறுப்பேற்றோம்.
நாடு தீப்பற்றி எரிந்த சந்தர்ப்பத்தில் அந்தத் தீயை அணைப்பதற்காக அந்த பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் வரிசை யுகத்தை இல்லாமல் செய்வதற்கு முடிந்துள்ளது.
மருந்துகளை பெற்றுக்கொடுப்பதற்கு முடிந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த முடிந்துள்ளது.
அதேபோன்று அந்த சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை செயற்பாட்டு ரீதியில் செயற்படுத்தி காட்டினோம்.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் இல்லை. மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு பணம் இல்லை. இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் திறைச்சேரிக்கு 3 பில்லியன் ரூபாயை பெற்றுக்கொடுத்தோம்.
இதனூடாக நாடு யதார்த்தத்துக்கு திரும்பியுள்ளது என்பதை நிருபித்துக் காட்டினோம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்ற முறையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு என்ற முறையில் மிக துரிதமாக பணியாற்றி வருகின்றோம்.
கடந்த வருடத்தில் 3 இலட்சத்து 12 ஆயிரம் பேரை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதற்கூடாக டிசெம்பர் மாதத்தில் வருமானத்தை அதிகரித்துகொண்டோம்.