பெண்களிற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும் என பெண் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று கபே அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி பெண் வேட்பாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கி குறித்த கருத்தரங்கு கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது, பங்குபற்றிய வெவ்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களிற்கு ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
இதன் போதே பெண்களிற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும் என பெண் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.