
வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி தேவராணி நவரத்தினத்தின் சேவை நயப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பருத்தித்துறை தனியார் விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றது.
பரா. ரதீஸ் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விருந்தினரை மண்டப வாயிலிலிருந்து ஆசிரியர்கள், பெற்றோர்களினால் திருமண மண்டபத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து மங்கல விக்கேற்றல் இறைவணக்கம் வரவேற்பு நடனம் வரவேற்புரை ஆசியுரை என்பன இடம் பெற்றன.
இதில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
வடமராட்சி.


