
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு இன்று பயணித்த பேரூந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்தனர். பேரூந்தில் 48 பயணிகள் பயணம் செய்ததாகவும், பலுசிஸ்தானின் லொஸ்பேலா பகுதியில் பேரூந்து சென்றபோது திருப்பம் ஒன்றில் சாரதி வேகமாக திரும்ப முற்பட்டபோது விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து பாலத்தின் தூணில் மோதி பள்ளத்தில் வீழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.