
திருகோணமலை மாவட்டம் தோப்பூர் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட வீரமாநகர் காயன்கேணிக் குள வெளியில் விவசாயிகள் அறுவடையினை ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருச்செல்வம் மதிவதனன் வயது 24 என்ற விவசாயி பாம்புக்கடிக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே மயக்கமுற்ற நிலையில் சக விவசாயிகள் அவரை உயிராபத்தான நிலையிலும் மிக வேகமாக மூதூர் தளவைத்திய சாலையில் அனுமதித்த சம்பவம் நேற்று காலை 11.00மணியளவில் பதிவாகியுள்ளது.
பாட்டாளிபுரத்தில் வைத்தியசாலை காணப்படுகின்ற போதிலும் அங்கு வைத்தியசேவை முன்னெடுக்கப்படாமை மற்றும் அவசர நிலைமைளின் போது பயணிக்க முடியாத வீதிகள் காரணமாக மக்கள் பலத்த இன்னல்களை எதிர் நோக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.