
யாழ்.சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து (29) பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த 27 வயதுடைய சண்முகலிங்கம் பிரகாஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.