
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இன்றை தினம் (30.01.2023) நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், மிக முக்கியமான விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு, விநியோகச் சங்கிலி, மருந்துப் பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி செயலகத்திலேயே இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.