மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களிற்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
மனிதநேய கண்ணிவெடி அகற்றும் டாஸ் நிறுவனத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களிற்கு இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான முறையில் கண்ணிவெடிகளை கண்டறிந்து அகற்றுவது தொடர்பிலும், பாதுகாப்பு முறைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது பயிற்றுவிக்கப்படுகிறது.
ஜப்பான் மக்கள் மற்றும் அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் குறித்த பணியாளர்கள் மனிதநேய பணியில் ஈடுபடவுள்ளனர்.
குறித்த பகுதியில் அம்மனிதநேய பணியில் இதுவரை 400 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன், இந்த பயிற்சியின் ஊடக மேலும் 70 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்