
கடவுச்சீட்டுகளை விண்ணப்பதாரியின் முகவரிக்கே தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி கடவுச்சீட்டுக்களை விண்ணப்பதாரர்களின் நிரந்தர முகவரியில் மட்டுமின்றி தற்காலிக வசிப்பிடத்தின் முகவரிக்கும் அவற்றை தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் கடவுச்சீட்டைக் கொண்டு வர வேண்டிய தற்காலிக முகவரியையும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் என குடிவரவு மற்றும் தேசிய கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்கும்புர தெரிவித்தார்.
பிரதேச அலுவலகங்களிலும் இதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
தேசிய வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளர்.