மட்டக்களப்பில்; தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெப்பிரவரி 4 தமிழர்களின் கரிநாளும்; ஒற்றை ஆட்சியையும் 13 திருத்த சட்டத்தை முற்றாக ஒழிப்போம் என கோரி மட்டு நகரில் மாபொரும் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இன்று சனிக்கிழமை (4) ஈடுபட்டனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தலைமையில் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்பாட்ட ஊர்வம் இன்று காலை 10 மணிக்கு காந்திபூங்காவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் ஒன்றினைந்தனர்.
இதில் கலந்து கொண்ட ஆர்பாட்டகாரர்கள் கறுப்பு பட்டியணிந்தவாறு பெப்பிரவரி 4 தமிழர்களின் கரிநாள், ஒற்றையாட்சியையும் 13ம் திருத்ததையும் முற்றாக நிராகரிப்போம், சர்வதேசமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை பெற்றுக் கொடு, தமிழினப் படுகொலைக்கான சர்வதேச நீதி விசாரணையை நடாத்து, சர்வதேசமே ஸ்ரீலங்காவை குற்றவவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்து, அரசியல் கைதிகளை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்,
பயங்கரவாத சட்டத்தை உடன் நீக்கு, ஸ்ரீலங்கா அரசே தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பை உடன் நிறுத்து, தமிழர் தாயகத்தின் வரலாற்று தொல்லியல் சான்றுகளை அழிக்காதே, தொடரும் இன அழிப்பை உடன் நிறுத்து, எங்கே எங்கே எங்கள் குpந்தைகள் எங்கே, ஜநாவே நாம் அழுவது உமக்கு கேக்கவில்லையா?, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மறக்கமாட்டோம், குடும்பம் குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சின்னஞ்சிறார்கள் எங்கே, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு காந்தி பூங்காவில் இருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக ஆரம்பித்து நகர் மணிக்கூட்டு போரம் வரை சென்று அங்கிருந்து பிரதான பேருந்து தரிப்பிடம் வரை சென்று 11.30 மணிவரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.